பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு சமூக நல வாரியம்

தமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றிய தகவல்.

மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சமூக நல வாரியம் தொடங்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பின்வரும் நோக்கங்களுடன் இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது.

  1. மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அரசு சாரா நிறுவனங்களின் தன்னார்வ முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துதல்.
  2. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப வசதியும் மற்றும் நிதியுதவியும் அளித்து அவற்றின் சேவையின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்துதல்.
  3. மாநில மற்றும் மத்திய சமூக நல வாரியங்களின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும் நன்முறையில் செயல்படுத்துவதை கண்காணித்தல். தமிழ்நாடு சமூக நல வாரியம் ஒரு அலுவல் சாரா தலைவரையும், மத்திய சமூக நல வாரியத்தால் நியமிக்கப்பட்ட 15 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 அலுவல் சாரா உறுப்பினர்களையும், ஆக மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பலப்படுத்தவும், அவற்றிற்கு உதவி செய்யும் பொருட்டு, கல்வி மற்றும் பயிற்சி, அதிகாரம் அளித்தல், கூட்டு முயற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வருவாய் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு சமூக நல வாரியம் ஊக்கப்படுத்தி உதவி செய்கிறது.
3.2
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
புவனேஸ்வரி Jul 21, 2020 06:11 PM

மகப்பேறு உதவி தொகை சம்பந்தமாக யாரை அணுகுவது வேண்டும்

தீபக் May 21, 2020 07:36 AM

புதியதாக விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்

பிரேம் குமாா் Apr 09, 2020 08:47 AM

அமைப்புச்சாரா தொழிலாளா் நல வாரியம் நிதி பற்றி எந்த தகவல் பலகை அனுக வேண்டும்

dinesh Feb 17, 2019 03:41 PM

சார் தகவல் நன்றாக உள்ளது...தொடருங்கள் பணியை

முத்துவேல் Jun 03, 2016 01:37 PM

திருமண உதவி தொகை முதல் பெண்ணிற்கு வாங்கிய பிரகு இரண்டாம் பெண்ணிற்கு வாங்க இயலுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top