பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்

ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

சுத்திகரிக்கப்படாத சாக்கடை, தொழிற் சாலைக் கழிவுகள், நீர்வரத்துக் குறைவு மற்றும் வேகமாக சரிந்துவரும் நிலத்தடிநீர்மட்டம் போன்ற காரணங்களால் கங்கை நீரை சார்ந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி, 2,037 கோடி ரூபாய் ஆகும். மேலும் கணவாய், நதிக்கரையோர நகரங்களான கேதார்நாத், ஹரித்துவார், கான்பூர், வாரணாசி, அலகாபாத், பாட்னா, டெல்லி போன்ற நகரங்களை அழகுபடுத்துவதற்காகவும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

"நமாமி கங்கை' திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

  • நீடித்த நகரக் கழிவுநீர் சுத்திகரிப்பை உறுதிசெய்தல்
  • கிராமப்புற பகுதிகளில் கழிவுநீரைக் கையாள்தல்
  • தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீரை நிர்வகித்தல்
  • கங்கைக் கரைப் பகுதிகளில் நதிகள் வரன்முறைப் பகுதிகளை செயல்படுத்துதல்
  • பகுத்தறிவுப் பூர்வமான விவசாய நடைமுறைகள், செயல்திறன்மிக்க  கால்வாய் முறைகளை உறுதிசெய்தல்
  • பல்லுயிர்ச்சூழல், நீர்வாழ் உயிரிகள் பாதுகாப்பைப் பேணி உயிர்ச்சூழலில் மறுமலர்ச்சியை நிச்சயப்படுத்துதல்
  • பகுத்தறிவுப்பூர்வமான மற்றும் நீடித்துவரும் விதத்தில் கப்பல் போக்குவரத்து   மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல்
  • கங்கை தகவல் மையமொன்றை ஏற்படுத்தி கங்கை குறித்த தகவல்களை நிர்வகித்தல்

வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் கங்கை நிதி

இந்தியாவின் வளர்ச்சிச் செயல்பாட்டில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மிக முக்கியமான பங்கெடுப்பாளர்கள் ஆவர். அவர்கள் இந்தியாவின் கல்வி, உடல்நலம், பண்பாடு பேணலில் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். அதேபோன்று கங்கை பாதுகாப்புத் திட்டத்திலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்ய, வெளிநாட்டு இந்தியர்களின் கங்கை நிதி என்றொரு திட்டம் வகுக்கப்பட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்நிதிக்கான ஏற்பாடுகள் நிர்வகிக்கப்படுகிறது.

ஆதாரம் : இந்திய அரசு

3.16666666667
saravanan.p May 17, 2020 11:26 PM

நன்று

இராம்.இராஜேஷ்கண்ணன் Jun 15, 2018 06:11 PM

கங்கையை தூய்மை செய்யும் திட்டம் பாராட்டுதலுக்கு உரிய ஒன்று. மிக நிச்சயமாக சாக்கடை கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் நதிகளை சீரழிக்கும் கொடிய விஷங்கள்.பாரத தேசத்தில் அனைத்து நதிகளும் நீர்நிலைகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. நீர்நிலைகள் அருகே இருக்கும் தொழிற்சாலைகளை கவனமுடன் கையாள வேண்டும்.எதிர்காலத்தில் நீர்நிலைகள் அருகே தொழிற்சாலை தொடங்கும் அனுமதிச் சட்டங்களில் திருத்தும் கொண்டு வரப்பட வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top