பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்

பிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம் பற்றிய குறிப்புகள்

நோக்கங்கள்

 • அனைத்து வேளாண் நிலங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நீர்பாசனம் கிடைக்கும் வகையில் செயல்பாடுகளை உறுதி செய்வது.
 • வேளாண் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெருக்குதல், விவசாய உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துதல்.
 • ஒரு துளி நீரில் நிறை தானியம்.

இத்திட்டத்தில் உள்ள பகுதிகள்

 • நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களைப் பழுதுபார்த்தல் உருவாக்குதல், புதுப்பித்தல் போன்றவை (நீர் ஆதார அமைச்சகம்)
 • உற்பத்தி செய்யப்பட்ட  இடத்தில் இருந்து விற்பனை நிலையம் வரை உள்ள பகுதிகளை வலுவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் (நிலம் பயன்பாட்டுத் துறை)
 • நீர் ஆதாரங்களைத் திறமையுடன் செயல்படுத்த தேவையான கருவிகள் (விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை)

செயல்படுத்தப்படும் உத்திகள்

 • 75:25 என்ற அளவில் மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படும். வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் நிதி அளிக்கப்படும்.
 • வேளாண் தொழில்நுட்ப கட்டமைப்பு நிதி மூலம் தேசிய சந்தையை உருவாக்குதல்

முக்கிய அம்சங்கள்

 • 2016-17 ஆம் ஆண்டில் செயல் படுத்தப்படும் விதத்தில் தேசிய வேளாண் சந்தையை ஏற்படுத்த ரூ.200 கோடி மூலதனத்தில் வேளாண் தொழில்நுட்ப கட்டமைப்பு நிதியை உருவாக்குதல்.
 • இத்திட்டத்தின்படி தேசிய அளவில் மின்னனு சந்தையை உருவாக்கவும் நாட்டில் உள்ள 642 ஒழுங்குமுறை சந்தைகளில் இதைப் பயன்படுத்த தேவையான கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்துதல்.
 • தேசிய சந்தையை உருவாக்க, பொதுவாக இயங்கும் மின்னனு சாதனம் தேவை என்பதால், சேவைகளை அளிக்கும் அமைப்பு ஒன்றிடம் இதைச் செயல்படுத்த அனுமதிக்கப்படும். இந்த அமைப்பு மின்னனு மூலம் சந்தையை நிர்வகிக்கும். இதை அரசும், தனியார் துறையும் இணைந்து உருவாக்கும்.
 • ஒழுங்கு முறை சந்தைக்கான சட்டத்தில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. இதுவரை 12 மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரைக்கு ஏற்ப காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு ஒழுங்குமுறை சந்தையில் இருந்து விலக்கு அளித்துள்ளன.

விலைகளை நிலைப்படுத்தும் நிதி

 • விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை, ரூ.500 கோடி மூலதனத்தில் விலைகளை நிலைப்படுத்தும் நிதி ஒன்றை நிறுவ அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அழுகும் விவசாய மற்றும் தோட்டக்கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தேவையான ஆதரவு அளிக்கப்படும். தேவையானால், மாநில அரசு மற்றும் மத்திய அமைப்புகள் மூலம் அப்பொருட்களை கொள்முதல் செய்து, பாதுகாத்து தேவையான போது சந்தைப்படுத்தும்.
 • மாநில அரசுகளும் இதற்காக சுழல் நிதி ஒன்றை ஏற்படுத்தும். மத்திய மாநில அரசுகளின் பங்கு இந்த நிதியில் 50:50 என்ற அளவில் இருக்கும். வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் இதன் விகிதம் 75:25 என்ற அளவில் இருக்கும். மாநிலங்களே விலைகளை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சிறு விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் வணிகத்தில் ஈடுபடுவோர் குழுவிற்கு ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1800 கோடி மெட்ரிக் டன் வெங்காயமும் 4000 மெட்ரிக் டன் உருளைக் கிழங்கும் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள முடியும். தேசிய விவசாய மற்றும் கூட்டுறவு சந்தைப்படுத்தும் அமைப்பிற்கு ரூ.5 கோடி 5000 மெட்ரிக் டன் வெங்காயத்தை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைப் பிரிவிற்கு முயற்சிகள்

எத்தனால் வேதிப் பொருள் கொள்முதல் செய்யும் திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு அதற்கு வருமானம்  உள்ள விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் எத்தனாலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் தீர்வை அடுத்த சர்க்கரைப் பருவத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும். இதனால் சர்க்கரை ஆலைகள் பயனடையும்.

 • சர்க்கரை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தீர்வை 25%ல் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
 • இதனால் சர்க்கரை ஆலைகள் கரும்பை ஆலைகளுக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு மிக சுலபமாக பணத்தை அளிக்க முடியும்.
 • எத்தனால் பயன்பாடு அளவு 2014-15ல் 3 சதவீதம் அளவிற்கு இருந்தது (72 கோடி லிட்டர்) இது 5 சதவீதம் அளவிற்கு (115 கோடி லிட்டர்) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துதல்

 • எம்-கிசான் என்ற வலைத்தளம் சிறந்த ஆதரவைப் பெற்றுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்கள் அவர்களது தாய் மொழியில் அனுப்பப்படுகின்றன. நாட்டில் உள்ள விவசாயத் துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசு அலுவர்கள் குறுந்தகவல்களை அனுப்புகின்றனர்.

ஒருங்கிணைந்த நீர்த்தேக்க நிர்வாகத் திட்டம்

இத்திட்டத்திற்காக 39.07 மில்லியன் எக்டேர் நிலத்திற்கு ரூ.11032.20 கோடி மத்திய அரசின் பங்காக மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த நீர்தேக்க நிர்வாகத் திட்டத்தின் சாதனை நிகழ்வு

 • சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட 16 கிராமங்களுக்கு இரண்டு செயல் திட்டங்கள் ஒருங்கிணைந்த நீர்த்தேக்க நிர்வாகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. அம்மாநிலத்தில் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் மண்பூர் வட்டத்தில் இக்கிராமங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த காடுகள் உள்ளன. 85 சதவீத மக்கள் பழங்குடி மக்களாகவும் அவர்களில் 80 சதவீதம் பேர் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளாகவும் உள்ளனர். மழையை நம்பி விவசாயம் செய்யும் இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் பயிரிடமுடிகிறது.
 • இங்கு வாழும் மக்கள் வறுமையினாலும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், இங்கு நடத்தப்பட்ட சாதனை மிகவும் கடினமானதாகும். ஒருங்கிணந்த நீர்த்தேக்க நிர்வாகத் திட்டத்தின் கீழ் மண் பரிசோதனை மற்றும் நீர் சேமிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. லாக் (பிசின்) உற்பத்தி இங்கு முக்கியமான தொழிலாகக் கருதப்படுகிறது. இதை விஞ்ஞான முறையில் செய்தால் வருமானம் அதிகரிக்கும் என்று அறியப்பட்டது.
 • லாக் என்பது லாக் பூச்சிகளால் வெளியிடப்படும் பிசின் போன்ற திரவம், இப்பூச்சிகள் அடர்ந்த காடுகளில் சில வகை மரங்களில் உள்ளன. இவ்வகைப் பிசின் போன்ற திரவம் மருந்துப் பொருட்கள், அழகு சாதனங்கள், பெயிண்ட், வார்னிஷ், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
 • இங்குள்ள விவசாயிகள் ஏற்கனவே லாக் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் பயன்படுத்துவது பழைய முறை. ஆனால், அவர்களுக்கு வருமானம் அதிகம் இல்லை. அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் திறமை வளர்க்கப்பட்டது. சிறந்த சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு வழிகாணப்பட்டது. கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் சமுதாய மக்களின் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் லாக் பிசினை உருவாக்கும் பூச்சிகள் உள்ள மரங்கள் நான்கு அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் இருந்தது. அங்குள்ள கிராம சபை 212 பேரைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டது. இவர்கள் 13 கிராமங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களை கிராம நீர்த்தேக்கக் குழுவும் அங்கீகரித்து லாக் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கண்கர் என்ற பகுதியில் 169 விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர் நீர்தேக்கக் குழு பயிற்சி முடித்த ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.3000 அளித்தது. இவர்கள் வனத்துறையிடம் இருந்து மரங்களுக்கான விரைகளை வாங்கினர். இதன் விலை கிலோவிற்கு ரூ.300ல் இருந்து ரூ.450 வரை இருந்தது. அதற்கு அடுத்தமுறை இந்த விவசாயிகள் தாங்களே விதைகளைத் தயார் செய்து கொண்டனர்.
 • விவசாயிகளுக்கு லாக் உற்பத்தி குறித்து பயிற்சி  அளிக்கப்பட்டது என்பது இதுவே முதல்முறையாக இருந்தது. அவர்களுக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து, மேலும் சில விவசாயிகள் ஆர்வமுடன் பயிற்சிக்கு வந்தனர். இதனால் ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை உருவாக்க ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி என்ற இடத்தில் உள்ள இந்திய பிசின் குறித்த கழகத்தின் உதவியுடன் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

தேசிய நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டம்

 • 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆதாரம் : "திட்டம்" மாத இதழ்

3.23255813953
ஆ.ஆரோக்கியசாமி Feb 12, 2019 04:59 PM

மாற்றுதிறனாளிக்கு இலவச மின் இணைப்பு விரைந்து வழங்கப்படுமா

இல. மணிகண்டன், வாழப்பாடி, திருமனூர். Feb 11, 2019 10:59 AM

சிறு , குறு விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் இணைப்பு வழங்கவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், மின் மோட்டார் வாங்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்க ,மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

முருகன் Feb 27, 2018 09:46 PM

Pvc pipe line இணைப்பு எப்படி பயன் பெறுவது

பா.சரவணக்குமார். Nov 04, 2016 06:10 PM

ஆதிதிராவிடர்ககளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு விரைந்து வழங்கப்படுமா.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top