பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018

தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018

முன்னுரை

இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்துதல் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப மேம்பாட்டினால் உணவு பதப்படுத்தும் தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மதிப்புக் கூட்டுதல், உணவு பாதுகாப்பு, உணவு பொருட்கள் வீணாவதை குறைத்தல், வருடம் முழுவதும் உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல், வேலை வாய்ப்பு அதிகரித்தல், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவர காரணமாக உள்ளது. இது தவிர, காய்கறிகள் மற்றும் பழங்களின் சேமிப்பு காலத்தை நீட்டிப்பு செய்வதுடன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களையும் கட்டுப்படுத்துதல் ஆகியனவும் ஏற்படுத்தியுள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழில், இந்தியாவின் மொத்த உணவு சந்தையில் 32 சதவீதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமும், ஏற்றுமதியில் 12 சதவீதமும் மற்றும் தொழில்துறை முதலீட்டில் 6 சதவீதமும் பங்களிக்கிறது. எனினும், தற்போது பதப்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் 2 சதவீதத்திற்கும் குறைவாகவும், கடல்சார் பொருட்கள் 8 சதவீதமும், பால் 35 சதவீதமும் மற்றும் கோழி இறைச்சி) 6 சதவீதமாகவும் உள்ளது. உலக அளவில் உணவு பதப்படுத்துதலில் இந்தியாவின் பங்கு 1 சதவீதம் மட்டுமேயாகும்.

தமிழ்நாட்டில் தற்போது வேளாண் பொருட்கள் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே பதப்படுத்தப்படுகின்றன. உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பதப்படுத்துதலின் பங்களிப்பினை 10 சதவீதத்திற்கு அதிகரிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் பிரிவில் ஒட்டுமொத்த சீர்திருத்தங்களை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு, உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணைப் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் போன்ற குறிக்கோள்களை அடையவும், உணவு பதப்படுத்துதலுக்கென தனியாக ஒரு கொள்கையை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு - ஒரு முன்னோட்டம்

இந்தியாவின் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 72 மில்லியன் மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றாகும். இம்மாநிலம் 1076 கி.மீ. நீள கடற்கரையும், வெப்பமண்டலம் மற்றும் மிதமான வெப்பமண்டல கால நிலைகளைக் கொண்டதாகும். இங்கு பல்வேறு பயிர்கள் பயிரிட சாதகமான 7 மாறுபட்ட வேளாண் பருவகால மண்டலங்கள் உள்ளன. தமிழ்நாடு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளினால் பயன்பெறுகிறது. தமிழகத்தில் செம்மண், பாறைமண், கரிசல்மண், வண்டல் மண், உவர் மண் போன்ற மண்வகைகள் பெரும்பாலாகக் காணப்படுகின்றன. மேற்கூறப்பட்ட சாதகமான காரணிகளால், தமிழ்நாட்டில் பல்வேறு வகையான வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை பொருட்கள் உற்பத்தி செய்ய ஏதுவான சூழ்நிலை உள்ளது. 4 முக்கிய துறைமுகங்கள், 4 சர்வதேச விமான நிலையங்கள், 2 இலட்சம் கீ.மீ நீளமுள்ள சாலை போக்குவரத்து வசதி மற்றும் பரந்த இரயில் இணைப்பு மூலம் தமிழ்நாடு, பெரும்பாலான தேசிய மற்றும் சர்வதேச வணிக மையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறமை பெற்ற மனித வளத்துடன், தமிழ்நாட்டில் 38 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இவ்வனைத்தும் உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றன.

உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பகுதிகள்

 • உணவு பதப்படுத்தும் தொழில், வேளாண்மை மற்றும் தொழில் பிரிவுகளுக்கிடையே ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகின்றது. இவ்விணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இக்கொள்கையின் குறிக்கோளை எளிதாக அடைய இயலும்.
 • மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின்
  வளர்ச்சிக்கு பின்வரும் பகுதிகள் முன்னேற்றப்பட வேண்டியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 • முன் மற்றும் பின் அறுவடைத் தொழில் நுட்பங்களில் விவசாயிகள் குழுவாக சேர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.
 • உணவு பதப்படுத்தும் தொழிற் சாலைக்குத் தேவையான தரமான பொருட்களை விளைவிக்கும் வகையில் பயிர் சாகுபடி முறைகளை மாற்றியமைத்தல் மற்றும் உயரிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தல்.
 • உணவு பதப்படுத்தும் தொழில் மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்துதல்.
 • உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் சட்ட ரீதியான இடர்பாடுகளை களைதல் மற்றும் புதிய விதிகள் மற்றும் எளிதான முறைகளை அறிமுகப்படுத்துதல்.
 • தொழிற்சாலைகளின் அதிக இடர்பாடுகள் மற்றும் பெரும் மூலதனத்தை கருத்தில் கொண்டு தொழில் முனைவோர்கள் தக்க நிதி உதவி பெற வழிவகை செய்தல்.
 • தொழில் முனைவோர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்களுக்குத் தேவையான தகவல்கள், புள்ளி விவரங்கள் மற்றும் சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நம்பகமான தகவல் தொடர்பு மற்றும் புள்ளி விவர மையங்கள் ஏற்படுத்துதல்.
 • வேளாண்மை மற்றும் அதன் சார்புத்துறைகளான தோட்டக்கலை, மலர் சாகுபடி, மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இணக்கமான அணுகு முறையை மேற்கொள்ளுதல்.
 • வேளாண் பொருட்களை, இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தி, தரம்பிரித்து மற்றும் வகைப்படுத்துவதன் மூலம் பதப்படுத்தும் பொருட்களின் தரத்தினை உயர்த்துதல் மற்றும் விரைவில் அழுகும் தன்மை கொண்ட காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், கடல்சார் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களுக்கு ஒருங்கிணைந்த குளிர்பதன இணைய கிடங்குகள் வசதிகளை ஏற்படுத்தி தருதல்.

சந்தை ஓர் கண்ணோட்டம்

.இந்தியா ஓர் கண்ணோட்டம்

உலக அளவில் வாழை, மாம்பழம், பப்பாளி, கொண்டைக்கடலை, பூண்டு, இஞ்சி மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை விளைவிக்கும் மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும், கரும்பு, அரிசி, உருளைக்கிழங்கு, கோதுமை, பூண்டு, நிலக்கடலை, உலர்ந்த வெங்காயம், பச்சைப்பட்டாணி, பூசணி, கொடி வகை காய்கள், காலிபிளவர், தேயிலை, தக்காளி, பயறு லெண்டில்) மற்றும் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய உணவு பதப்படுத்தும் துறை 2015-16 ல் 6.87 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், 2011-12 ஆம் ஆண்டின் விலையில், மொத்த மதிப்பு சேர்க்கையில் ரூ. 1.62 இலட்சம் கோடி பங்களித்துள்ளது.

தமிழ்நாடு - ஓர் கண்ணோட்டம்

வேளாண் விளைபொருட்கள் பதப்படுத்துதலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 24,000 சிறு மற்றும் மிகச்சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் 1,100 நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் உணவு பதப்படுத்துதலில் தமிழ்நாடு 7% பங்களிக்கிறது. தமிழ்நாட்டில் இது சாத்தியமாவதற்கு ஏராளமான வேளாண் வளங்கள், அதிகரித்து வரும் தேவைகள், தேசிய மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளே காரணங்கள் ஆகும். வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டின் 40% மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% பங்களிக்கிறது.

தமிழ்நாட்டில் 120 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள், 140 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியில் 3 சதவீதமும், காய்கறிகளின் உற்பத்தியில் 7 சதவீதமும் மற்றும் பழங்களின் உற்பத்தியில் 12 சதவீதமும் ஆகும்.

வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கிராம்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் மக்காச்சோளம், புளி, திராட்சை, மஞ்சள் மற்றும் மிளகு உற்பத்தியிலும் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இது தவிர, தமிழ்நாடு ஆண்டு ஒன்றிற்கு 77.42 இலட்சம் மெட்ரிக் டன் பால் உற்பத்தியும் செய்கிறது. மேலும், கடல் மீன் உற்பத்தியில் 4வது இடத்திலும், உள்நாட்டு மீன் உற்பத்தியில் 6வது இடத்திலும் உள்ளது.

2017-18ஆம் ஆண்டில் 4.41 இலட்சம் மெட்ரிக் டன் கறிக்கோழி உற்பத்தி செய்து, இந்திய அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக திகழ்கிறது. கோழி வளர்ப்பிற்கு உகந்த நாமக்கல், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் 1,741 கோடிக்கும் மேலான முட்டைகளை உற்பத்தி செய்து முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக உள்ளது.

ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள்

 • சாதகமான புவியியல் அமைப்பு மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அருகாமையில் இந்தியா உள்ளதால் , பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய தளமாக உருவாக தேவையான திறனை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2013-2014 வரையிலான 5 ஆண்டுகளின் முடிவில் ஏற்றுமதி மதிப்பின் சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20.53 சதவீதத்தை அடைந்து, தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் மதிப்பு 37.79 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12.1 சதவீதமாகும்.
 • கடல்சார் பொருட்கள், அரிசி, தானிய பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநில மாக திகழ்கிறது. 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களின் மதிப்பு 1490 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
 • மேலும், காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் நவீனமயமான விற்பனை முனையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சந்தைகள் பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டினை ஊக்குவிக்க அச்சு மற்றும் ஆரம் (Hub& Spoke) மாதிரியில் செயல்படும். இவ்விற்பனை முனையங்கள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.

ஆயத்த நடவடிக்கைகள்

 • தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, ஆகஸ்டு 2017 - இல் தொலைநோக்கு திட்ட அறிக்கை ஒன்றினை தயார் செய்தது. விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்கு உயர்த்த வழிவகுக்கும் தேசிய மேம்பாட்டு இலக்குகளான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் வளங்களை பெருக்குதல் போன்றவற்றில் சந்தைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சிறப்புமிகு பங்களிப்பு பற்றி இந்த தொலைநோக்கு திட்ட அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 • மாநிலத்தின் உணவு பதப்படுத்தலை மேம்படுத்தும் வகையில், மதிப்பூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், குழு மேம்பாடு மூலம் மூலப்பொருட்கள் உற்பத்தியை 4.3 ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள்
 • சாதகமான புவியியல் அமைப்பு மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அருகாமையில் இந்தியா உள்ளதால் , பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய தளமாக உருவாக தேவையான திறனை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2013-2014 வரையிலான 5 ஆண்டுகளின் முடிவில் ஏற்றுமதி மதிப்பின் சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20.53 சதவீதத்தை அடைந்து, தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் மதிப்பு 37.79 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12.1 சதவீதமாகும்.
 • கடல்சார் பொருட்கள், அரிசி, தானிய பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநில மாக திகழ்கிறது. 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களின் மதிப்பு 1490 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
 • மேலும், காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் நவீனமயமான விற்பனை முனையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சந்தைகள் பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டினை ஊக்குவிக்க அச்சு மற்றும் ஆரம் (Hub& Spoke) மாதிரியில் செயல்படும். இவ்விற்பனை முனையங்கள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.

ஆயத்த நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, ஆகஸ்டு 2017 - இல் தொலைநோக்கு திட்ட அறிக்கை ஒன்றினை தயார் செய்தது. விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்கு உயர்த்த வழிவகுக்கும் தேசிய மேம்பாட்டு இலக்குகளான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் வளங்களை பெருக்குதல் போன்றவற்றில் சந்தைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சிறப்புமிகு பங்களிப்பு பற்றி இந்த தொலைநோக்கு திட்ட அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் உணவு பதப்படுத்தலை மேம்படுத்தும் வகையில், மதிப்பூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், குழு மேம்பாடு மூலம் மூலப்பொருட்கள் உற்பத்தியை  அதிகரித்தல், பதப்படுத்துதலை ஊக்குவித்தல், வேளாண் விளைபொருட்கள் பதப்படுத்தும் பிரிவின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்தல், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை பரவலாக்குதல், உணவு பாதுகாப்புக்கான தரத்தை உறுதிசெய்தல் மற்றும் தரமான பொருட்களின் ஏற்றுமதி போன்ற உத்திகளை இத்தொலைநோக்குத் திட்டம் விளக்குகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.97101449275
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top