பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / ஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்

ஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆற்றல் இழந்த குழந்தைகள் விரிவாக மூன்று வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளனர்.

அவை,

 • உடல் இயல்பு சார்ந்த ஊனமுற்ற குழந்தைகள்.
 • மன இயல்பு சார்ந்த பாதிக்கப்பட்ட குழந்தைகள்
 • சமூகத்தில் பொருந்துதலில் குறைபாடுள்ள குழந்தைகள்

குழந்தைகளிடையே ஆற்றல் இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

உடல் சார்ந்த ஆற்றல் இழப்புக்கான பல்வேறு காரணங்களாவன,

 • பரம்பரை
 • சாதகமில்லாத பேறுகாலத்திற்கு முந்தைய காலம்
 • குழந்தை பிறப்பின் போது ஏற்படும் காயம்.
 • முன் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட விபத்தினால் அதிக எதிர்பார்ப்பு இருப்பினும், வீழ்ச்சி ஏற்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்ளுதல்.
 • நோய் தாக்கிய பகுதியை அறுவை செய்து வெட்டி எடுப்பதால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
 • முன் குழந்தை பருவத்தில் ஏற்படும் மனம் சார்ந்த மற்றும் மனவெழுச்சி பிரச்சனைகளின் விளைவாக ஏற்படும் திக்கிப் பேசுதல், பேச்சுத் தடுமாற்றம் மற்றும் பேச்சுக் குறைபாடுகள்.
 • காதில் தொற்றுக்கள் மற்றும் காயங்களின் விளைவாக கேட்கும் திறனில் குறைபாடுகள்.
 • உள் இயல்பு சார்ந்த, மனவெழுச்சி பிரச்சனைகள் மற்றும் கவனிக்கப்படாமல் புறக்கணிப்பு செய்யப்படுவதாக உருவாகும் எண்ணத்தின் விளைவாக நடவடிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும்.
 • இது போன்ற குழந்தைகள் விரும்பத்தக்க சமூக விதிகளுக்கு ஏற்றபடி தங்களை ஆட்படுத்திக் கொள்ள முடிவதில்லை. அதனால் அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.
 • கற்பனை திறன் குறைபாடுகள் "ஃபாந்தம் ஊனங்கள்” (Phantam handicaps) என்பது சிறு குழந்தைகள் தாங்கள் ஊனத்துடன் இருப்பதாக கற்பனை செய்யும் பொழுது ஏற்படுகிறது. அவர்கள் செய்ய விரும்பாத செயல்களில் இருந்து விடுவித்து விடுமாறு கோருவார்கள்.

ஆற்றல் இழந்தவர்கள்/ஊனமுற்றவர்களின் வகைகள்

ஊனங்கள் என்பது உடல் சார்ந்த, நரம்பு மண்டலம் சார்ந்த மற்றும் சமூகத்தில் பொருந்துதலில் ஏற்படும் குறைபாடுகள் என விளைகின்றன.

உடல் சார்ந்த குறைபாடுகள்

 • கண்கள் : முழுதுமாக பார்வை இழத்தல் மற்றும் பகுதியான பார்வை இழத்தல்.
 • காதுகள் : காது முழுவதுமாக கேளாமை மற்றும் கேட்கும் திறனில் சிறு குறைபாடு.
 • கை, கால் இழத்தல் வலுவிழந்த கை, கால்
 • இயல்புக்கு மாறான உடலின் உறுப்பு : விரல்களில் தோல் இழைமம், கூன் முதுகு, ஆறாவது கை கால் விரல், குறையுடன் உருவான காது, முயல் உதடு, பிளவுப்பட்ட உதடுகள், முகம் மற்றும் உடலில் பிறப்பின் போது ஏற்பட்ட அடையாள குறிகள்.
 • குறைபாடுள்ள பேச்சு: திக்கிப் பேசுதல் விளைவாக குழந்தையின் ஆளுமை பாதிக்கப்படுகிறது.
 • ஆண்டு முழுவதும் தொடரும் நீடித்த குறைபாடுகள்:- வருடம் முழுதும் தொடர்ந்து, மீண்டும் தொடர்ச்சியாக இருக்கும் குறைபாடுகளை பொதுவாக, தொடர்ந்து நீடிக்கும் குறைபாடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது, இருதய நோய்கள், ருமாட்டிஸம், தசைப்பற்றுக்களை பாதிக்கும் நோய் போன்றவை.

நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடுகள்

இவைகள் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுவனவாகும். உதாரணம்:- பெருமூளை பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், காக்காய் வலிப்பு நோய், மற்றும் மன அழுத்தம் காரணமாக மனச்சிதைவு நோய், பெரு மூளை பாதிப்பால், மூளை சரியாக வேலை செய்யாததால் விளையும் பக்கவாதம்/ கால், கைகளை அசைக்க முடியாத குறைபாடு ஏற்படுகிறது. திடீரென எதிர்பாராத விதத்தில் ஏற்படும் கை, கால், இடுப்பு மற்றும் உடலை தூக்கித் தூக்கிப்போடுதல் போன்றவை காக்காய் வலிப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக நினைவு இழப்பு மற்றும் தசை கட்டுப்பாடு போன்றவை பொதுவாக ஏற்படும்.

இக்குறைபாடுகளை சரிசெய்து விடலாம். அதிக அளவில் முன்னேற்றம் அடைய செய்ய முடியும். நோய் கண்டறிந்து அதற்கு உண்டான சிகிச்சையை சரியான சமயத்தில் எடுத்துக் கொள்கிற போது, மருத்துவம், அறுவை மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் ஆச்சரியப்படும்படியாக பல்வேறு ஊனங்களை எதிர்த்து சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளன.

சமூகத்தில் பொருந்துதலில் ஏற்பட்டுள்ள குறைபாடு

சமூகத்தில் பொருந்துதலில் குறைபாடு உள்ள குழந்தைகள் உருவாக்கப்பட்ட விதிகளை ஏற்றுக் கொள்ளாததால், குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் சமூக விரோத செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுவிடுவர். அதன் விளைவாக இளம் குற்றவாளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சனைகளை உருவாக்கி விடுவர். சமூக நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை என்பது இழப்பு நேரிட்ட குழந்தை அன்பு – முறையான நேரிடலாம் அல்லது குறைவுள்ள பார்வை ஏற்படலாம். பார்வையற்ற குழந்தைகள் அவர்களை முழுமையாக உருவாக்கிக் கொள்ள சிறப்பு வாய்ந்த கருவிகளையும், சிறப்பு வாய்ந்த கவனத்தையும் நாடுவார்கள். வழிகாட்டுதல் மற்றும் பொதுவான சமூக பாதுகாப்பு ஆகியவற்றை இழந்து இருப்பர்.

எப்போது ஒரு குழந்தை, ஆற்றல் இழந்து / பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது?

ஒரு குழந்தை பாதிக்கப்பட்டதாக கருதப்படுவதற்கு

 • எப்போது அவன்/அவளால் அதிகபட்சமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணர்வு புலன்களை பயன்படுத்த முடியாமல் இருப்பது. உதாரணம் :- பார்வையற்ற குழந்தை, காது கேளாத மற்றும் பேச முடியாத குழந்தை.
 • எப்போது அவன்/அவளால், அவர்கள் வாழும் சமூகத்தில் பொருந்திப் போகமுடியாத நிலை ஏற்படுகிறதோ அக்குழந்தை நடவடிக்கைகளில் பிரச்சனைகளை வெளிப்படுத்தும். காஃப்பா என்பவர் நடவடிக்கைகளில் குறைபாடுள்ள குழந்தைகள் என்பவர்கள், நீண்ட காலத்திற்கு மற்றும் குறிப்பிட்ட அளவில், பதில் குறிப்பை (respond) அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத/சுய திருப்தி அளிக்காத வகைகளில் வெளிப்படுத்துகின்றவர்கள். ஆனாலும் அனைவருக்கும் மிகவும் நல்ல முறையில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் மற்றும் சுய திருப்தி அடையும் நடவடிக்கைகளையும் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 • ஒரு குழந்தை அதன் புலன் உணர்வுகளை முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்தும் திறனுடன் இருந்தும், உதாரணம் :- தனிச்சிறப்பு வாய்ந்த தெளிவான அறிவுள்ள குழந்தை பாதிக்கப்பட்ட குழந்தையாக இருப்பது பற்றி அறியலாம்.

பார்வை இழத்தல்

குழந்தைகள் அவர்கள் வாழும் இந்த உலகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவும் முக்கிய கருவி பார்வையாகும். பார்வை ஆற்றல் குறைந்து முழுவதுமாக பார்வையை இழக்க அநேகமாக ஒரு பார்வையற்ற குழந்தையால் சாதாரண குழந்தையுடன் போட்டியிட முடியாது, இதன் விளைவாக, பார்வையற்ற குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உடல் வகை மற்றும் பொருளாதார வகையிலும் பிறரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படுகிறது.

பார்வை இழப்பிற்கான காரணங்கள்

 • ஆற்றல் குறைந்த பார்வை கீழ் வரும் காரணங்களால் ஏற்படலாம்.
 • பிறவியோடு ஏற்பட்ட பார்வை இழப்பு இவ்வகையில், பிறக்கும் போதே குழந்தை பார்வை இழந்து பிறப்பதைக் குறிக்கிறது.
 • மரபணுவால் ஆற்றல் குறைந்து, அதன் விளைவாக குறைபாடுள்ள பார்வைக்கான முக்கிய உறுப்புகளான கண்கள் கரு வளர்ச்சியின் போது குறைவுடன் உருவாகிவிடும்.
 • இக்குழந்தைகள் சுற்றுச் சூழல் பற்றி அறிவதற்கு தொடு உணர்வு மற்றும் கேட்கும் திறனையே பயன்படுத்துவர்.

இடையே பெறப்பட்ட பார்வை இழப்பு

இந்த பார்வை இழப்பில் குழந்தையானது பிறவியில் பார்வை இழந்து பிறப்பதில்லை. குழந்தை பார்வையை விபத்தின் காரணமாக இழக்கலாம். இது போன்ற பார்வை இழப்பை அல்லது பார்வை குறையை இடையே ஏற்பட்ட பார்வை இழப்பு அல்லது இடை நிகழ்ந்த பார்வை இழப்பு என்கிறோம்.

ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் பார்வை இழப்பு மிக நீண்ட காலத்திற்கு உயிர்ச்சத்து A குறை உணவில் ஏற்படுவதன் விளைவாக இந்த பாதிப்பு உண்டாகிறது. உயிர்ச்சத்து A குறைபாடு கண்களில் வறட்சியையும், (ஜெராப்தால்மியா), குறைந்த வெளிச்சத்தில் பார்க்கமுடியாத நிலையையும் (மாலைக் கண்) ஏற்படுத்தும். எப்பித்தீலியல் திசுக்களின் மோசமான நிலையின் விளைவாக கண் தொற்றுக்கள் ஆகியன சேர்ந்து கண்களுக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.

தாமதமாக தரப்படும் சிகிச்சை

வறுமை, அலட்சியப் போக்கு மற்றும் பழங்கால மூட நம்பிக்கைகள் போன்றவை தாமதமாக வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான காரணங்களாகும். மருத்துவ வசதி குறைபாடுகள், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள பார்வையற்றோர் தொகையானது உலகின் மொத்த தொகையில் பெரும்பான்மையை வகிக்கிறது.

பகுதி பார்வையிழந்த குழந்தையின் பண்புகள்

 • ஒரு பகுதி பார்வையிழப்பு ஏற்பட்ட குழந்தை, திறனற்று, அருவருப்பான தோற்றமுடன் அதிக எச்சரிக்கையுடன் அவன் அவளது இயக்கத்தில் காணப்படுவர்.
 • அவர்களது கண்கள் சிவப்பு நிறத்துடன், நீருடன், வீக்கத்துடன், அரிப்புடன், வெளிச்சத்தை பார்க்கும் போது கூச்சத்துடனும் இருக்கும். குழந்தையானது தலைவலி, வாந்தி, கண் பார்வையில் குழப்பம் உள்ளதாகக் கூறலாம். குழந்தைக்கு பக்கவாட்டு பார்வை (squint) இருக்கலாம். மேலும் ஓரக்கண் பார்வை (cross-eyed) போன்றும் தோன்றலாம். மோசமான பார்வை குழந்தையை எரிச்சலடையச் செய்யும், தனித்து இருக்கும் நிலையையும், சூழ்நிலையில் தன்னை மறந்து இருக்குமாறும் செய்யும்.
 • குழந்தைக்கு மிக சில வாய்ப்புகளால் பிறருடன், பல வேறுபட்ட சமூக குழுக்களுடன் ஒத்துப் போக கற்றுக் கொண்டு இருக்கலாம். இதன் விளைவாக சமூகத்தில் பொருந்துதலில் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தையானது அடங்காததாக, பணியாததாக வலிய சண்டை செய்ய முனையும் குணமும் கொண்டு இருக்கும். ஏனெனில், அக்குழந்தைகள் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் பிறரை நாட வேண்டி இருப்பதால் இது போன்ற செயல்களால் வெறுப்பு மேலோங்கி இருந்து, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும்.

பார்வையற்ற குழந்தையின் சிறப்பான தேவைகள்

கண்பார்வையற்ற குழந்தைக்கு வழங்க வேண்டிய அனைத்து உதவியையும், கவனத்தையும் முக்கியமாக செய்து, அக்குழந்தை சுதந்திரமாக இருப்பதற்கும், தன் நம்பிக்கையோடு இருக்கவும், பொருளாதார நிலையை சீராக்கவும் வழிவகை செய்து தரவேண்டும். உடல், சமூகம் மற்றும் மனவெழுச்சித் தேவைகளை கவனித்து, சிறப்பான கவனம் செலுத்தி, திருப்தி அளிக்கக்கூடிய பலன்களை பெற வழி செய்ய வேண்டும்.

உடல் சார்ந்த தேவைகள்

பார்வையற்ற குழந்தையின் பெற்றோர் சிறப்பு கவனம் செலுத்தி, குழந்தைக்கு உணவளித்து, உடை உடுத்த செய்ய வேண்டும். குழந்தையை அவர்களது தினசரி கடமைகளான கழிப்பறையை உபயோகித்தல், குளித்தல், உடை உடுத்துதல் மற்றும் உணவு உண்ணுதல் போன்றவைகளுக்கு பெற்றோர் பயிற்சி அளிக்க வேண்டும். பார்வையற்ற குழந்தைக்கு வீட்டினுள் சுற்றி வர, எந்த பொருளின் மீதும் தடுக்கி விழாமல், அவர்கள் அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க சிறப்புப் பயிற்சி மற்றும் அசைந்து செல்லும் பயிற்சியும் பார்வையற்ற குழந்தைகளுக்கு மிக இளவயதிலேயே அளிக்க வேண்டும். பார்வையற்ற குழந்தைகளுக்கு, தங்கள் உடம்பு மற்றும் அவர்கள் இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறம் பற்றி நன்கு அறிந்திருக்கும்படியும், வசதி உடையதாகவும் செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பார்வையற்ற குழந்தைகளை அடிக்கடி மருத்துவரிடம் அழைத்துச் சென்ற அவர்களது வலுவற்ற உடலமைப்பை நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்

மனவெழுச்சி மற்றும் சமூகத்தேவைகள்

 • பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர், சிறப்பான உறவை, அணைத்து இறுகத் தழுவுதல், அன்புடன் பாசத்துடன் கொஞ்சுதல், இழந்த நம்பிக்கையை மீட்டளித்தல் போன்றவற்றை பார்வையற்ற குழந்தைகளிடம் பயப்படுத்தும்போதும், மனவெழுச்சியால் பாதிப்படையும் போது செய்வது அவசியம் ஆகும். தொடர்ந்து அன்புடன், மென்மையான பராமரிப்புடன், பாசமுடன் இருத்தல் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவியாக இருக்கும். மேலும், பார்வையற்ற குழந்தைகளை நன்கு பராமரிப்பதன் விளைவாக அவர்களின் மனவெழுச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் பயிற்சி கிடைப்பதாகவும், மனதளவில் பாதுகாப்பாகவும் கருதுவர்.
 • அன்பு, வெறுப்பு, பொறாமை, பயம், மகிழ்ச்சி போன்றவைகள் நாம் தினந்தோறும் பார்க்கும் சில மனவெழுச்சிகள் ஆகும். ஒரு சிறிய குழந்தைக்கு அதன் மனவெழுச்சியை குறைந்த அளவில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு குழந்தை வளரும் போது அதன் மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள பயிற்சியும் கிடைக்கிறது. பயம் மற்றும் திகில் ஆகிய இரண்டும் குடலின் இறுக்கம் தளர்த்துவன் என்று கூறப்படுகிறது. மனவெழுச்சிகளால் பொருந்திக் கொள்ளுவதில் பிரச்சனை உள்ள குழந்தைகள் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை தற்காலிகமாக இழந்து சிறுநீர் கழித்துவிடுவார்கள். கவலையுடனும், சிடுசிடுப்பாக இருப்பது, பசி ஏற்படுத்தாமல் உணவை குறைத்து, உண்ணச் செய்து மோசமான ஊட்டநிலை மற்றும் உடல்நலக் குறைவையும் ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு அவர்களது மனவெழுச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் திசுபிடிப்பும் மற்றும் வாயின் அருகே நுரையும் தோன்றும்.
 • ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு உணர்வு பெறுவதற்கு அன்பு, அரவணைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. இது போன்ற அரவணைப்பு ஒரு குழந்தையை சரியான வழியில், தன்னம்பிக்கையுடன் செயலாற்றும்படி செய்கிறது. ஒரு பார்வையற்ற குழந்தையின் சமூக உலகம் என்பது அவன் அவள் பெற்றோர்கள். பெற்றோரின் மனப்பான்மை மற்றும் குழந்தையின் குறைபாட்டை ஏற்றுக்கொள்ளும் தன்மை, நீண்ட நெடுவழி பயணம் போல, அக்குழந்தை தினசரி பிரச்சனைகளை சமாளிப்பதற்கு தன்னம்பிக்கையை குழந்தையிடம் உருவாக்க வேண்டும். ஒரு சாதாரண குழந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது பாதிப்படைந்த குழந்தையின் முழு வளர்ச்சியும் மிகவும் மெதுவாகவே நடைபெறும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாகும்.
 • 'அன்பு செலுத்து' மற்றும் 'அன்பைப் பெறு'. இதன் அவசியம் மிகவும் உறுதியானதாக ஊனமுற்ற குழந்தைகளிடையே உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அன்பின் பிணைப்புகள் குழந்தைகளை திடுமென வளர்வதற்கு, வளர்ச்சி தொடர்புடைய செயல்பாட்டில் உதவுகின்றன. இதன் பயனாக குழந்தைகள் சமூக சூழலில் நன்கு பொருந்திக் கொள்கின்றனர். சமூக மற்றும் மனவெழுச்சி சார்ந்த பொருந்துதல்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிக முக்கியமானவை. சுதந்திரமாக செயல்படுவதன் அவசியம்
 • குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை ஆய்வு செய்வதற்கு பெற்றோர் உதவ வேண்டும். மேலும், தினசரி பணிகளில் சுதந்திரமாக செயல்படவும் உதவ வேண்டும். முதலில் தலை கேசம் வாருதல், சட்டையில் பொத்தான் பொருத்துதல், காலணிகளில் நூலை (lace) கட்டுதல் போன்றவைகளுக்கு நேரம் அதிகமாக செலவிடப்பட்டாலும், விளைவு ஏடாகோடமாக இருக்கும். புகழ்தல் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, புதுப்பணிகளை நம்பிக்கையுடன் செயல்படுத்த வைக்கலாம். குழந்தைகள் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த, அவர்கள் திறன் வாய்ந்தவர்கள் என நினைக்குமாறு செய்வதற்கு, தொழில் பயிற்சி வழிகாட்டுதல் மூலம் பயிற்சி அளித்து, அவன் அவள் பணி ஏற்பதற்கு அப்பயிற்சி உதவியாக இருக்கும்படி செய்யலாம். இதனால் பார்வையற்ற குழந்தை பிறரை விட தங்களையே சார்ந்து இருப்பது உறுதியாகிறது. நீங்கள் எப்போதாவது பார்வையற்றோர் உபயோகிக்கும் நீளமான வெள்ளை நிறக்கோலை பார்த்து உள்ளீர்களா? கோலில் ஒலி ஏற்படுத்த மணியை பொருத்தலாம்.

கல்விகற்றலின் தேவை

 • மோசமான பார்வை, மொத்த பார்வை இழத்தல், பகுதியான பார்வை இழப்பு உடைய குழந்தைகளுக்கு கற்பித்தல் என்பது ஆற்றக்கூடிய செயல் ஆகும்.
 • பெரிய அச்சுக்களை உடைய புத்தகங்கள், மற்றும் ஒழுங்கான வெளிச்சமுடைய மேஜைகள், பார்வை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு போதுமானதாக இருக்கும். கருமை போர்டை விட பச்சை வெளிர் கருமை நிற போர்டு, மெருகூட்டப்படாத தாள்கள் மற்றும் மென்மையான கருப்பு பென்சில்கள் உபயோகிப்பதால், குழந்தைகள் நல்ல படியாக பார்க்க உதவியாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகள் சிறப்பு வாய்ந்த கருவிகளைக் கொண்டு, சிறப்பாக கற்பிப்பவர்களின் வழிக்காட்டுதல் மூலமாக சிறப்பாக கற்பிக்கப்படுவார்கள்.
 • கடுமையான குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் சிறப்பான கருவிகளைக் கொண்டு கற்பிக்கப்படுவார்கள். நீங்கள் 'பிரெயில்' பற்றி கேள்விபட்டதுண்டா? இது ஒரு வகையாக எழுத்துக்களை படித்தல், எண்கள் மற்றும் வார்த்தைகளை படித்தல், எழுதுதல் முறை ஆகும். அடிப்படை பிரெயிலர் என்பது 6 சாவிகள் கொண்ட, தட்டச்சு இயந்திரம் போன்ற கருவி ஆகும். வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக ஒவ்வொரு புள்ளியாக குத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பிரெயில் உபயோகிக்க ஒழுங்கு முறையாகக் கற்பிக்கப்பட்டால் கற்றுக் கொள்வது வெகு சுலபம்; பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்கள், பார்வையற்ற குழந்தைகள் கல்வி கற்க பயன்படுத்தப்படுகிறது. பார்வையற்ற குழந்தைகள் காதால் கேட்கும் திறனை வளர்த்து கொள்வது, மிக நல்லமுறையில் கல்வி கற்க உதவியாக இருக்கும். கல்வி மற்றும் பயிற்சி மூலமாக பார்வையற்ற குழந்தைகளுக்கு சிறப்பான கவனம் செலுத்தப்படுகிறது. நடு வயதிலுள்ள ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில், சட்டப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு நம்பிக்கை அளிக்கிறது.

காது கேளாமை

 • பிறந்த குழந்தைகள் சத்தத்திற்கு மறுகுறிப்பு தெரிவிக்கின்ற வகையில் திடுக்குறும், கண்களை இமைக்காமல் முறைத்து அதன் கேட்கும் திறனை வெளிப்படுத்தும். வளர்கின்றபோது பெற்றோரின் குரலை அடையாளம் கண்டு கொள்ளும்; மேலும் கூவிக்கொண்டு, களகளவென ஒலி எழுப்பி மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டு இருக்கும். கேட்கும் திறன், மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். பிறகு, குழந்தைகள் சப்தங்களுடன் கருத்தை இணைக்க கற்றுக்கொள்வர்.
 • கேட்கும் திறனாற்றல் குறைபாடுடன் குழந்தை பிறக்க நேரிட்டால் அதன் கருத்துக்களை சப்தங்களுடன் இணைக்க முடியாமல் போகும். ஏனெனில் அவர்கள் சப்தத்தை கேட்டிருக்கவே மாட்டார்கள். இதன் விளைவாக தகவல் தொடர்பில் தடங்கல் அல்லது இடையூறுகள் ஏற்படும்.

காது கேளாமை மற்றும் சற்றே செவியில் உள்ள குறைபாடு

காதுகேளாத குழந்தை என்பது காது கேட்கும் உணர்வினை மொழியை கற்பதற்கு முன்பே இழந்துவிடுவது ஆகும். இதன் மூலம் குழந்தையானது பிறக்கும் போதே கேட்கும் திறன் இன்றி பிறந்துள்ளது உறுதியாகுகிறது. இக்குழந்தை எப்போதும் அமைதியாக, செயல்பாடின்றி ஊமையாக இருக்கும்.

சற்றே செவிடாக உள்ள குறைபாடு என்பது மற்றொரு வகையில் இயல்பாய் வாழ்க்கையின் பின் பகுதியில் ஏற்படும் குறைபாடாகும். குழந்தையானது பல்வேறுபட்ட அளவுகளில் கேட்கும் திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

காது கேளாமை மற்றும் கேட்கும் திறனை இழப்பதற்கான காரணங்கள்

கேட்கும் திறனில் குறைபாடு மற்றும் கேட்கும் திறனை இழத்தல் என்பது கீழ்வரும் காரணங்களால் ஏற்படுகிறது.

அ. ஒலி கடந்து செல்லும் பாதையில் பாதிப்பு ஏற்படுவதால் (Conductive Deafness) உண்டாகும் காது கேளாமை என்பது காதின் அமைப்பைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு நன்கு விளங்கும். காதின் வெளிப்புறத்திற்கு ஒலியானது காற்றின் மூலமாக செலுத்தப்படுகிறது. செவிப்பறையின் சவ்வு போன்ற உறையை ஒலி அடைந்ததும், ஒலி அலைகள், அரைவட்ட சுற்றளவு உடைய கால்வாய்களில் திரவ நிலையை மாற்றம் அடையச் செய்கின்றன. வெளிப்புறக் காதில் காற்று நுழைந்து செல்வது 'ஒலி கடந்து செல்லும் பாதை வழி' என்று கூறப்படுகிறது. கடந்து செல்லும் பாதை வழியானது பல காரணங்களால் பாதிப்படையலாம்.

அவை.

 1. காதினுள் மெழுகு உருவாதல்
 2. பாதையின் வழியில் வெளிப்பொருட்கள் இருத்தல்
 3. காதின் வெளிப்புறத்தில் வீக்கம் இருத்தல்

இது போன்ற நிலைகளில் தற்காலிகமாக காது கேட்காத நிலை இருக்கும். இந்நிலையினை மருத்துவ சிகிச்சை மூலமாக சரி செய்துவிடலாம். ஒலி கடந்து செல்லும் காது கேளாமையில் முன் தொண்டையிலிருந்து, நடுக்காது குழிவரை செல்லும் குழாயினில் (Eustachian tube) அடைப்பு ஏற்படும். அடைப்பை ஏற்படுத்தும் திரவம் அடர்வாகி விடும். அந்த திரவம் அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்படும்.

ஆ. புலன் உணர்வு நரம்பு சார்ந்த காது கேளாமை செவிப்பறை, செவியின் சுருள்வளை, கேட்டல் தொடர்புடைய நரம்பு, மற்றும் தொடர்புடைய மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பால் புலன் உணர்வு நரம்பு சார்ந்த காது கேளாமை ஏற்படும்.

கரு முதலமைவுடைய காது கேளாமை

கருமுதலமைவுடைய காது கேளாமை என்பது மரபணு குறைபாடுகளினாலும், பிறப்பின் போது முழு வளர்ச்சி அடையாததாலும் ஏற்படலாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள், ஒரு கர்ப்பிணி மணல் வாரி அம்மை நோயால் (German measles) தாக்கப்படும் போது காது கேளாத குறையுடன் குழந்தை பிறக்கும். கடுமையான மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டு, தாயின் இரத்தம் கருவில் உள்ள குழந்தையின் இரத்தத்துடன் பொருந்தாத நிலை இருக்கும் போது அதன் விளைவாக கருமுதல்மைவுடைய காது கேளாமை ஏற்படும்.

இயல்பாய் ஏற்படும் காது கேளாமை

கலவையாக கேட்கும் திறன் இழத்தல் என்பது கேட்கும் திறனின் ஆற்றல் குறைவுகள், ஒலி கடந்து செல்லும் பாதை பாதிப்பால் காது கேளாமை மற்றும் புலன் உணர்வு நரம்பு சார்ந்த காது கேளாமை ஆகியவைகளின் கலவையின் விளைவாக ஏற்படுகின்றது.

காது கேளாத குழந்தையின் பண்புகள்

 • குழந்தை காது கேளாததோடு, பேச முடியாத நிலையுடனும் இருக்கும். பேச்சுக் குறைபாடு என்பது சாதாரணமாக காது கேளாத குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படும். அக்குழந்தைகள் மொழி/சொல் தொகுதிகள் ஆகியவற்றை கற்றுக்கொள்வதில் சிரமப்படுவார்கள்.
 • ஒருவருக்கும் கேட்காத மொழியைக் கற்றுக்கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடுகிறது. முக்கியமாக, இக்குழந்தைகள், அறிவுத்திறனில் குறைவாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களால் இருக்கும் வாய்ப்புகளை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
 • இக்குழந்தைகள் ஐயப்பாடு நிறைந்த மனதுடன் இருப்பார்கள். ஏனெனில் பார்த்தல், கேட்டலில் ஒருங்கிணைப்பு இல்லாமையினால், இதனால் பிறருடன் நட்புறவு ஏற்படுத்தி கொள்வதிலும், திறனின்றி இருப்பார்கள்.
 • ஒரு காது கேளாத குழந்தை எப்போதும் மாறுபட்டு இருப்பதுடன் பிடிவாதத்துடனும் இருக்கும்.
 • கேட்கும் ஆற்றல் திறனில் குறைவு ஏற்பட்டு எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய தன்மை குழந்தைகளிடத்தில் ஏற்பட்டால் செயல்பாட்டில் குறைவு ஏற்படச் செய்து விடுவதுடன், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.
 • மோசமான தகவல் தொடர்புகள் அபாரமான விளைவுகளால், சமூகத்தொடர்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒரு காது கேளாத குழந்தையின் சிறப்பான தேவைகள்

காதுகேளாத குறைபாடு அதிகமான பிரச்சனைகளை மொழி, சொல் தொகுதி முதல் புரிந்து கொள்ளும் திறனிலும், தகவல் தொடர்பு கொள்வதிலும் ஏற்படுத்தும்.

உடல் சார்ந்த தேவைகள்

பயனுறுதியுள்ள செயல்பாட்டினால், உடல் சார்ந்த வசதிகளை செய்து பராமரித்து, இக்குழந்தைகளின் கேட்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு வழி வகுத்து தர வேண்டும். பெற்றோர், குழந்தைக்கு ஒலியைக் கண்டறிந்து தொடர்பு செய்துகொள்ள உதவி செய்யலாம். அதாவது ஓடும் நீரை - குழாயுடன், மணியோசையை கதவுடன்; அறிவாற்றலை பயன்படுத்தி பெற்றோர்கள், விளையாட்டு முறையிலான நுட்பங்களைக் கொண்டு குழந்தைகளுக்கு உதவி, ஒலியை கண்டுணரச் செய்யலாம். உதாரணம்:- இசை ஒலியுடன் கூடிய விளையாட்டு பொம்மையை மறைத்து வைத்தல் மற்றும் குழந்தையை உற்சாகப்படுத்தி அந்த பொம்மையின் ஒலியை வைத்து தேட வைத்தல். பெரியவர்களின் உதவியோடு குழந்தையை ஒலிகளில் வேறுபாடுகளை கண்டறியச் செய்ய வேண்டும்.

உதாரணம் :- தாய் மற்றும் தந்தையின் மாறுபாடுள்ள குரல், பாட்டு மற்றும் அழுகை முதலானவை.

அடுத்த படி என்னவென்றால், பேச்சு ஒலிகளை அடையாளம் காண்பது. இது நேரடியாக குழந்தையின் பார்வை மற்றும் பிற புலன்களைப் பயன்படுத்தும் திறனைப் பொறுத்து அமைகிறது.

மனவெழுச்சிகள் மற்றும் சமூகத்தேவைகள்

 • ஏற்கெனவே படித்தது போல ஐயப்பாடு என்பது இரண்டாவது பண்பாக காது கேளாத குழந்தைகளிடம் காணப்படுகிறது. முக்கியமாக, மனவெழுச்சியில் இக்குழந்தைகளின் சமூக நடவடிக்கைகள் செம்மைப்படுத்தப்பட்டு, பண்பும் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • "அன்பு செலுத்தி, அன்பை பெறுதல்' என்பது கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியமோ, அதே போன்று காது கேளாத குழந்தைகளுக்கும் முக்கியமானதாகும்.
 • அன்பும், பாசமும் மனவெழுச்சிகளுக்கு பாதுகாப்பை அளிப்பதோடு, மேன்மையான கற்றலுக்கு தேவையான ஊக்குவிப்பையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. கற்றலின் தேவைகள்
 • இதில் குழந்தையின் மொழியை புரிந்து கொள்ளும் திறனும் உள்ளடங்கி உள்ளது. பார்வையாலும், உடல் அசைவுகளாலும், தகவல் தொடர்பு கொள்ள கற்றுக் கொள்வர்.
 • வாய்மொழியான முறை அல்லது உதடசைவால் வாசிப்பது என்பது உதட்டசைவுகளை கவனித்து, ஒலிகளை கண்டறிவது, காது கேளாத குழந்தைகளுக்கு கற்பிக்க ஒரு சிறந்த முறையாகும். இது ஒரு மெதுவான முறையாகும். இம்முறையில் கற்றுக்கொள்பவர் மற்றும் கற்பிப்பவர் அதிகமான பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல், கை, கால் அசைவு முறை அல்லது சைகை மொழி
 • இம்முறையில் குழந்தை சைகைகளால், குறிப்புகளால் மற்றும் விரல் எழுத்துக்கூட்டல்களின் உதவியால் தகவல் தொடர்பு கொள்கிறது.

சுதந்திரமாக இருப்பதன் அவசியம்

காது கேளாத குழந்தை சுதந்திரமாக இருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது. சுதந்திரமாக செயல்படுகின்ற திறன் பெற்றால் அக்குழந்தைகள், அவர்கள் வாழும் சமூகத்தில் மிக முக்கியமான உறுப்பினராகக் கருதப்படுவர். கேட்கும் சாதனங்களின் கண்டுபிடிப்புகள், காது கேளாதவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மற்றும் இழந்த கை, கால்களுக்கான காரணங்கள்

பாதிக்கப்பட்ட கை, கால்களைக் கொண்டு எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுக்களை ஈடுபடுத்தி செயல்பாடுகளை முழுமையாக ஒரு குழந்தையால் செயல்படுத்த முடியாது. இது போன்ற ஊனத்தை கை, கால்கள் இழந்த குழந்தைகளும் அனுபவிப்பார்கள். இக்குழந்தைகளை 'எலும்பு மூட்டு செயலிழந்தவர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

குரூயிக்ஷான்க் என்ற உள் இயல்பு சார்ந்த வல்லுநர் எந்த ஒரு குழந்தைக்கு குறைபாடு ஏற்பட்டு தவறான வடிவத்தை அல்லது சாதாரணமாக எலும்பு, தசை, மூட்டுக்கள் செயல்படுவதில் குறுக்கீடு ஏற்பட்டுள்ளதோ, அக்குழந்தையை பாதிக்கப்பட்ட அல்லது கை, கால் போன்றவற்றை இழந்த குழந்தை என்று வரையறுத்துள்ளார். இது போன்ற எலும்புக் குறைபாடு நிலையான கரு முதலமைவுடையது அல்லது இயல்பாய் ஏற்படும் குறையாகவும் இருக்கலாம்.

கருமுதலமைவுடைய தவறான வடிவம்

மரபணு பிரச்சனையால் ஏற்படலாம். கர்ப்ப காலம் என்பது இடர்மிகுந்த காலம். கர்ப்பிணி பெண் மணல்வாரி அம்மை, புட்டாலம்மை, மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான வைரஸ் தொற்றுக்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் கரு உருவாதலில் அதிகமான பாதிப்பு ஏற்படும். போதை மருந்துகள் பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்களின் கருவில் உருவாகும் சிசுவின் எலும்புகள், கை, கால் போன்றவைகளும் பிற முக்கிய உடல் உறுப்புகளும் ஒழுங்கற்ற உருவம் கொண்டு இருக்குமாறு விளைவுகளை ஏற்படுத்தும்.

இயல்பாய் ஏற்படும் எலும்பு தொடர்புடைய குறைபாடுகள்

 • இது போன்ற குறைபாடுகள் வாழ்க்கையின் எந்த நிலையிலும் ஏற்படலாம். இளம்பிள்ளை வாதம் மற்றும் எலும்பில் ஏற்படும் எலும்புருக்கி நோய் குழந்தைகளில் நொண்டி போன்ற விளைவுகளை ஏற்படுத்தி, நீண்ட காலத்திற்கு நீடிக்கச் செய்யும்.
 • கருமுதலமைவுடைய அல்லது இயல்பாய் ஏற்படும் தசை பாதிப்படைதல், தசையின் ஆற்றல்மிக்க செயல்பாட்டை பாதிக்கும். பாதிப்பின் அளவு, பாதிப்பின் கடுமையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.
 • தண்டுவட காயங்கள் எப்போதுமே உடல் சார்ந்த இயக்கங்களின் ஆற்றலை கட்டுப்படுத்துவதில் பொறுப்பாகிறது.
 • கை, கால் போன்றவை வெட்டி எடுக்கப்படும் விபத்துக்களின் விளைவாக எலும்பு தவறான வடிவம் பெற்று இருப்பதுடன், செயலாற்ற முடியாத நிலையும் ஏற்படுகிறது.

எலும்பு சார்ந்த குறைபாடுகளை அளத்தல்

குறைபாட்டின் கருத்தாழத்தை கை, கால்களின் செயல்பாட்டை கொண்டு அளவிடலாம். சில சிறு கை, கால் குறைபாடுகள், ஒரு குழந்தையின் இயக்கத்திற்கு அதிகமான தடைகளை ஏற்படுத்தாது. மற்றொரு வகையில், குறைபாடு மிகவும் கடுமையானதாக, நிலையானதாக இருக்குமானால், குழந்தையின் இயக்கம் மற்றும் சுதந்திரம் மிகவும் அதிகமான அளவில் பாதிப்படையும். எனவே, இது போன்ற நிலைகள் பொருத்துதலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட கை, கால் இழந்த குழந்தையின் பண்புகள்

உடல் சார்ந்த குறைபாடுகள் தாழ்வு மனப்பான்மையை இளம் குழந்தைகளிடையே ஏற்படுத்தி விடும். போதும் என்ற நிறைவற்ற உணர்வின் விளைவாக தன் இரக்க (Self pity) மனப்பான்மை ஏற்படும்.

இது போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். தனியாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது, அவர்கள் சமூகத்தில் தடுமாற்றமுடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. இன்னும் சிறிது அதிகப்படியாக வளர்ந்த குழந்தை எப்போதும் உள இயல்பு சார்ந்த அதிர்ச்சியான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரும். ஏனெனில், முரண்பாடுகளை கொண்ட பாதிப்படைந்த உறுப்புகளைக் கொண்ட குழந்தைகளின் பேரார்வங்கள் மற்றும் செயலாக்க திறன்களினால் வளர்ந்த குழந்தைகள் அடிக்கடி உள் இயல்பு சார்ந்த அதிர்ச்சி தரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

கவலை, மிகைப்படியான மனச்சோர்வு, தப்பித்துக் கொள்ளுதல் மற்றும் அதிகமாக வலிய சண்டைக்குச் செல்லுதல் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மற்றும் உறுப்பு (கை, கால்) இழந்த குழந்தைகளிடையே காணலாம்.

இழந்த உறுப்புகள் /பாதிக்கப்பட்ட கை, கால் உள்ள குழந்தைகளின் சிறப்பான தேவைகள்

பார்வையற்ற, காது கேளாத குழந்தைகளைப் போல உறுப்பு இழந்து பாதிப்படைந்த குழந்தைகளுக்கு உடல், சமூகம், மனவெழுச்சி மற்றும் கல்வி சார்ந்த சிறப்பான தேவைகள் அவசியமாகின்றன.

உடல் சார்ந்த தேவைகள் என்பது தினசரி செயல்பாடுகளை ஒழுங்கான முறையில் நிறைவேற்றிட உடல் உறுப்புகள் ஒத்துழைக்க வேண்டும். பெற்றோர், குழந்தைக்கு விட அதிகமான

அளவிற்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டும். குழந்தைகளின் ஊனத்திற்கு தாங்களே காரணம் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு எப்போதும் குழந்தைகள் செய்யும் அதிகப்படியான தவறுகளை மன்னிக்கத் தயாராகிவிடுவர். காலம் கடந்து செல்லும்போது, குழந்தை உரிமையாக கோரிக்கை விடுக்க ஆரம்பித்து, உதவியை ஏற்றுக் கொண்டு, பிறகு சுதந்திரமாகவும், தன்னை சார்ந்து நம்பிக்கையுடன் இருப்பதற்கு முயற்சி மேற்கொள்ளாது நிறுத்திவிடும். அறிவியல் நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் விளைவாக செயற்கையான உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. உடல் குறைபாடுகளை கடந்து வருவதற்கு செயற்கை உறுப்புகள் உதவுகின்றன. செயற்கை உறுப்புகள் பார்ப்பதற்கும், உபயோகித்து, செயல்படுத்துவதற்கும் சாதாரண நபர்களைப் போல செயல்பட உதவுகிறது. உடலியக்கம் சார்ந்த சிகிச்சை (physiotherapy) என்பது ஒரு மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆகும். இந்த அறிவியல் ஊனமுற்ற குழந்தைக்கு முழு உடல் திறனையும் அதிகப்படியாக வெளிப்படுத்த உதவி செய்கிறது. தனிச்சிறப்பு வாய்ந்த கருவிகளான (caliper) கால், கையில் அழுத்தம் இன்றி நடக்க உதவும் இணைத்துக்கட்டப்பட்ட, வரிச்சல் காலணிகள் (shoes) மற்றும் செயற்கை உறுப்புகளுடன் (கை, கால்) போதுமான, ஒழுங்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும்போது மிகச்சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்.

சமூக மற்றும் மனவெழுச்சிகளின் தேவைகள்

விளையாட்டு என்பது மிக முக்கியமான சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுவதற்கு வாய்ப்பளிக்கும் கருவியாகும். பாதிக்கப்பட்ட உறுப்பு கொண்ட குழந்தைகள் எப்போதுமே குழுவிளையாட்டு செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். இது போன்ற வேறுபாடுகளை கண்டறியும்போது சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளை பாதிப்படையச் செய்யும். குழந்தையானது அதிகமாக மனச்சோர்வுடன், வாட்டத்துடன் ஒதுக்கப்பட்டு இருக்கும். "நொண்டியான உடலில், செயலிழந்த மனநிலை இருக்கும்” என்ற மூடநம்பிக்கையுடன் உள்ள சமூகத்தின் மனப்பான்மை, பாதிக்கப்பட்ட ஊனமான உறுப்புகளை கொண்ட குழந்தைக்கு தவறான சுய எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

அதிகப்படியாக வலுச்சண்டையிடுதல் மற்றும் கடுங்கோபத்தை திடீரென வெளிப்படுத்துதல் போன்ற குணங்கள் பொதுவாக கை, கால் ஊனமுற்ற குழந்தைகளிடையே காணப்படுகிறது. அன்புடன் பராமரித்தல் மற்றும் ஒழுங்கு முறையான பயிற்சி ஆகியன சுதந்திரமாக, தன்னையே சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்குதல் போன்றவைகள் ஊனமுற்ற குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் ஆகும்.

கல்வித் தேவைகள்

இதில் செய்தல், எழுதுதல், விளையாட்டு, வரைதல், வர்ணம் தீட்டுதல், பின்னுதல் மற்றும் நடனம் ஆடுதல் போன்ற சில செயல்பாடுகள், கல்வி தேவையில் சேர்க்கப்பட்டு, ஊனமுற்ற குழந்தைகளை அவற்றில் ஈடுபடச் செய்து செயல்பட வைக்கிறது.

குழந்தைகளிடம் ஏற்படும் சமூக எதிர்மறையான விளைவுகளுக்கான காரணங்கள்

சமூகத்தால் பாதிப்படைந்து ஊனமுற்ற குழந்தைகள், சமூகத்தில் தங்களுக்கென ஒரு இடத்தை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். இக்குழந்தைகள், அவர்களை ஒத்த வயதுள்ள சாதாரண குழந்தைகளைப் போன்று நடந்து கொள்வதில்லை. இக்குழந்தைகள் சமூகவிரோத செயல்களான திருடுதல், பிக்பாக்கெட் அடிப்பது, சீட்டு விளையாடுதல், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருப்பார்கள். இன்னும் சிலர் குற்றங்கள் பல புரிந்து அசாதாரண பாலியல் மற்றும் பல் வேறுபட்ட நடவடிக்கைகளிலும் பல வேறுபட்ட காரணங்களுக்கு சமூக பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்.

முறிவுப்பட்ட குடும்பங்கள்

பெற்றோர்களுக்கிடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள் இருக்கும் நிலையில், குழந்தைகள் குடும்பத்தில் இருந்து வெளிவந்து விடுவர். குழந்தைகளுக்குத் தேவையான அன்பும், பாசமும், வழிகாட்டுதல்களும் கிடைக்காமல் போகின்றது. குழந்தைகளுக்கு சில நேரங்களில் போதுமான அன்பு கிடைக்காமல் போய் விடுவதுடன், உயிர் வாழ்வதற்கு தெருக்களில் அலையும் நிர்பந்தமும் ஏற்பட்டு விடுகிறது. தேவையற்ற குழந்தைகளும், அனாதைகளும், சமூகத்தில் பொருந்திக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.

வறுமை மற்றும் அறியாமை

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் அறியாமை நிலையில் உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவை இல்லாத நிலை ஏற்படுகிறது. பெற்றோரிடம் இருந்து ஒழுங்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமையால் இக்குழந்தைகள், சிறிய திருட்டுக்களில் ஈடுபட ஆரம்பித்து தங்கள் வாழ்க்கைக்கு வழித் தேடிக் கொள்கின்றனர். இப்பழக்கம் வளர்ந்து நாளடைவில் பெரிய அளவு சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட வைத்துவிடுகிறது.

சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதில் முன்னேற்றம் ஏற்படுவதுடன் தன்னம்பிக்கையும் வளரும். நீங்கள் எப்போதாவது கை இழந்த குழந்தையை பார்த்துள்ளீர்களா? அக்குழந்தைகள் கால் / வாயின் துணை அழகிய வர்ணங்கள் தீட்டுவதில் சிறந்து விளங்குவது அறியப்படுகிறது. இக்குழந்தைகளின் சுற்றுச் சூழ்நிலையை சிறப்பானதாக அமைக்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்லாமை, போதுமான கல்வியின்மை

வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்வதில் பள்ளி இரண்டாம் இடத்தை வகிக்கிறது. எது முதல் இடத்தை வகிக்கின்றது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம், வீடு. ஏழ்மையில் உள்ள பெற்றோர் குழந்தைகளை பொருளாதார பற்றாக் குறையின் காரணமாக பள்ளிக்கு அனுப்புவதில்லை. இக்குழந்தைகள் சரியான வழிக்காட்டுதல் இன்றி தெருக்களில் நீண்ட நேரங்கள் இருக்கின்றனர். மேலும் குழந்தைகள் கூட்டுச்சண்டைகளிலும், விரும்பத்தகாத செயல்பாடுகளிலும் அடிக்கடி ஈடுபடுகின்றனர். பள்ளியில் கற்றுத்தரப்படும் கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றின் குறைவால் விபரீதமான விளைவுகள் ஏற்படுகின்றன. உறுதி வாய்ந்த சாதாரண மற்றும் சமூக மதிப்புகளை அவர்களை சார்ந்த சூழ்நிலையிலுள்ள பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிற நடுவயதைச் சார்ந்தவர்களிடம் இருந்து பெற முடியாமல் போகும்போது, உடன் இருக்கும் சக வயதினரின் அழுத்தத்தின் காரணமாக எதிர்மறை பண்பினைப் பெற்று ஆற்றல் இழந்து விடுவர்.

நல்ல பங்கினை வகிக்கும் மாதிரிகள் இல்லாமை

குழந்தைகளுக்கு மிகவும் நுண்ணிய விஷயங்களை பதிவு செய்து காட்டக் கூடிய உணர்வு மிகுந்து இருப்பதால், உடனடியாக தங்கள் சூழ்நிலையில் உள்ள பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். கை கூலி வாங்கும் இயல்புடைய மற்றும் நேர்மையற்ற நபர்கள் எதிர்மறை மதிப்புகளை குழந்தைகளிடம் உருவாக்குவார்கள்.

அக்குழந்தைகள் சில செயல்பாடுகளில் சரியானவை மற்றும் தவறானவைகளுக்கு வித்தியாசம் கண்டுணர முடியாமல் தோல்வி அடைவர். நீதிநெறி முறைகள் அதன் மதிப்புகள் குறித்து முற்காலத்தில் கற்றுக் கொடுத்தது போல் தற்போது கற்றுத் தரப்படுவதில்லை. குழந்தைகள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் இருந்து நீதிநெறிமுறை மதிப்புகளை மனதில் வாங்கிக் கொள்வார்கள். தவறான நபர்களை பங்கு மாதிரிகளாக, குழந்தைகள் நினைக்கும்போது பிரச்சனைகள் உருவாகின்றன.

வளரும் காலங்களில் மேற்பார்வை இல்லாமை

இது ஏழ்மை மற்றும் பண வசதி நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடத்தில் ஏற்படலாம். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நீண்ட நேரத்திற்கு உழைக்க நேரிடுகிறது. ஆனால் பண வசதி படைத்தோர், குழந்தை வளருகையில் தவறைக் காணத் தவறுதல்/ கவனியாது புறக்கணித்து, தாங்கள் பணக்காரர் ஆகும் ஆசையை மட்டுமே கொண்டிருப்பர். இது போன்ற பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை வீட்டு வேலையாட்களிடம் விட்டு விடுவர். குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக வளரும் காலங்களில் நல்ல ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதற்கு பெற்றோர் தங்களது மதிப்புமிக்க நேரத்தை செலவிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தை கற்பதற்கும் தன்னையே சார்ந்து இருப்பதற்கும் உதவும் வழிமுறைகள்

 • ஊனமுடைய, குறைபாடுள்ள குழந்தைகள் கட்டுப்பாடுகள் இருப்பினும் கற்கின்றனர். ஒரு சாதாரணக் குழந்தையால் எளிதாக கற்க முடிவதை, ஊனமுற்ற குழந்தையானது, கடின உழைப்பு, பயிற்சி மற்றும் மிகுந்த மன உறுதியுடன் கற்கிறது. அனைத்து நிலையிலும் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தையானது, சாதாரண குழந்தையைப் போன்று வளர்ந்து உருவாகும் உரிமையைப் பெற்றுள்ளன. இருந்தாலும், இச்சிறப்பு வாய்ந்த குழந்தைகள் "மாறுபட்ட திறனுடைய நபர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
 • காலம் மாறிவிட்டது; அன்பு செலுத்தப்பட வேண்டியதன் அவசியம், போதுமான சுதந்திரம் அளிக்கும் உணர்வு, மற்றும் சாதாரண குழந்தையைப் போன்று இருப்பதற்கான பயிற்சியை பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது போன்ற அதிகப்படியான விழிப்புணர்வு ஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வகையில் தனிகவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சனையும் உள்ளது.
 • பல்வேறுபட்ட வகைகளில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு உதவும் முறைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாதிப்பை கையாள வேண்டிய முறையினை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 • அதிகமான அன்பும், பாசமும் மற்றும் பெற்றோரின் ஆதரவும் இன்றியமையாதது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சிறப்பு கல்வியாளர்கள்! பெற்றோர்/உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்களின் முறையான வழிகாட்டுதல். சிறப்பான கவனம் தேவைப்படும் குழந்தையுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள் சிறந்த பங்கு மாதிரிகளாக திகழ வேண்டும். இதனால் பாதிப்படைந்த குழந்தை, மாதிரியைப் பார்த்து நன்கு கற்றுக் கொள்ளலாம். இக் குழந்தைகளுக்கு அதிகமான அளவு தூண்டுதல் தேவைப்படும். இக்குழந்தைகளுக்கு அதிகமான வாய்ப்புகள் மற்றும் ஊக்குவிப்பு தேவைப்படும், அப்போது தான் இக்குழந்தைகள் நன்கு கற்று, செயல்படலாம்.
 • கற்பதன் பரப்பளவு என்பது திரும்பத் திரும்ப செய்வதனாலும், திறன்/பாடம்/மேற்கொண்ட வேலையை, தலைமை வகித்து, முயற்சித்து நிறைவாக செய்து முடிப்பதையும் பொறுத்து உள்ளது.
 • "மாறுபட்ட திறமை” யுடன் கூடிய குழந்தைக்கு அதிக அளவில் பொறுமை மற்றும் குடும்ப நபர்கள், ஆசிரியர்கள், நண்பர்களின் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படுகிறது.
 • சிறப்பான பயிற்சி/ சிகிச்சைகளுடன், கற்பதற்கு உதவும் சிறப்பான கருவிகள் மற்றும் நுட்பங்கள், கற்பதை மேம்படுத்தி உயர்த்துபவை. உங்களால் ஒரு சில கருவிகளின் நுட்பங்களின் பெயர்களைக் கூற முடியுமா? பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பான உபகரணங்கள் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்ட உபகரணங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கட்டுப்படுத்துகின்றவற்றை முறியடித்து இயங்கச் செய்யும். உபகரணங்கள் ஆவன: மூக்குக் கண்ணாடிகள், பிரெயில் புத்தகங்கள், செயற்கை உறுப்புகள் மற்றும் கேட்கும் சாதனம் முதலானவை.
 • ஒத்த வயதை சேர்ந்தவர்களோடு செயல் எதிர்செயல் மிகவும் முக்கியமானது. குழந்தையின் ஊனம் ஒத்த வயதினரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது மிகுதியான முக்கியத்துவம் வாய்ந்தது. மாறுபட்ட திறனுடைய குழந்தை முதன்மை நிலையில் உள்ள குழந்தைகளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தாலும் சிறப்பான குழந்தைக்கு வியக்கத்தகும் வகையில் ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஒத்த வயதைச் சார்ந்த குழுவினரின் ஒரு பகுதியாக செயல்பட்டாலும் ஊனமுற்ற குழந்தைக்கு 'தனித்துவம் அளிக்கப்படுகிறது.
 • சமூகத்தால் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு மற்ற சிறப்புத் தன்மை வாய்ந்த குழந்தைகளைப் போல உதவிகள் தேவைப்படுகின்றன. அரசு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அருட்பண்பு (Philanthropist) குழந்தைகளுக்கு வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை அளித்து உதவிட வேண்டும்.
 • அக்குழந்தைக்கு அவசரமான, அதிக தேவையான கலந்தாய்வு மற்றும் உள் இயல்பு சார்ந்த வழிகாட்டுதல் சிறப்பான வகையில் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக கொடுக்கப்படுகின்றன. அக்குழந்தைகளுக்கு தொடர்ந்து கண்காணிப்பு அவர்களது நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்காக தேவைப்படுகிறது. குழந்தையை சரியான பாதையில் நடத்திச் செல்வதற்கு அதிக நேரமும், முயற்சியும் தேவைப்படும்.
 • சமூகத்தால் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு கல்வி, தொழில் திறன்கள் மற்றும் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி சமூகத்தில் மறுசீரமைப்புடன் சிறப்பான கவனமும் தேவைப்படுகிறது.
 • இறுதியாக, குழந்தைகள் தங்களையே சார்ந்து இருப்பதற்கும் மகிழ்ச்சியாக உடல் சார்ந்த மற்றும் மனவெழுச்சிகளில் உறுதியுடன் இருக்கவும், குடும்பம் மற்றும் சமூகம் பெருமை கொள்ள எடுக்கப்பட்ட எந்த முயற்சியையும் கைவிடக்கூடாது. சுருக்கம்
 • இழந்த உறுப்புகள் பாதிப்படைந்த உறுப்புகள் ஆகியவற்றிற்கு சிறப்பான கவனம் தேவைப்படுகிறது. அப்போது தான் குழந்தையால் சுதந்திரம் மற்றும் தன்னிறைவும் அடைய முடிகிறது.
 • பாதிப்படைந்த குழந்தைக்கு மறுசீரமைப்பு கொடுக்க வேண்டியது மிக முக்கியம்.
 • சாதாரண மற்றும் செயலாற்ற முடியாத/பாதிப்படைந்த குழந்தைகளுக்குள் மாறுபாடுகள் உள்ளன. உடல் சார்ந்த ஊனமும், சமூகத்தில் பொருந்துதலில் குறைபாடு உள்ள குழந்தைகளும் பாதிப்படைந்த குழந்தைகள் குழந்தைகளிடம் செயலாற்ற முடியாத நிலை என்பது கருமுதலமைவுடைய மற்றும் பெறப்பட்டதாகும். உடல் சார்ந்த நரம்பு மண்டல பாதிப்பின் குறைபாடுகள் மற்றும் சமூகத்தில் பொருந்துதலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிப்படைவார்கள்.

மறுசீரமைப்பு

இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் மருத்துவம், சமூகம், கல்வி மற்றும் தொழில் சார்ந்த அளவைகளை பயன்படுத்தி பயிற்சி கொடுப்பதுடன், தனி நபர்களுக்கு அவர்களது அதிகப்படியான திறமையின் நிலைக்கு ஏற்ப மீண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 1. மருத்துவ மறுசீரமைப்பு - மீண்டும் பணி செய்யும் நிலைக்குக் கொணருதல் - அறுவை, உடற்பயிற்சி, கருவிகள், செயற்கை உறுப்புகள். சமூக மறு சீரமைப்பு - மீண்டும் குடும்பம் மற்றும் சமூக நட்புறவை ஏற்படுத்துதல் – கலந்தாய்வுகள் மற்றும் வழிகாட்டுதல் சேவைகள்.
 2. ஒரு குழந்தை ஊனமுற்றது / பாதிப்படைந்தது என்று கருதப்படுவதற்கு அவன் அவளது உடல், சமூகம், மனவெழுச்சி மற்றும் கல்விகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும் நிலை ஏற்படுகிறது. குறைபாடுடைய பார்வை, மூக்கு கண்ணாடி உபயோகிப்பதால் சற்று முன்னேற்றம் அடையும். பார்வையற்றோர்களுக்கு சிறப்பான கருவிகள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தி கல்வி கற்க வைக்கலாம்.
 3. கல்வி மறுசீரமைப்பு - தொழிலில் மறுசீரமைப்புக்காக உதவும் நோக்கத்தோடு செய்யப்படுவது. தொழில் மறுசீரமைப்பு - தன் வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதிக்கும் திறமையை மீண்டும் உண்டாக்குதல் - தொழிலுக்கான பயிற்சி அளிப்பது - தொழில் தொடர்புடைய சிகிச்சை .
 4. கேட்பதில் குறைபாடு ஏற்பட்டால் பேச்சு மற்றும் தகவல் தொடர்பில் பிரச்சனைகள் உருவாகும். இக்குறைபாட்டை கேட்கும் சாதனங்களின் உதவியுடன் சரிசெய்து விடலாம். உதட்டு அசைவுகள் மற்றும் சைகை மொழி ஆகியன காது கேளாத குழந்தைக்கு கற்றலை எளிதாக்கி விடுகிறது.
 5. உள் இயல்பு சார்ந்த மறுசீரமைப்பு - சுய மரியாதை, அந்தஸ்து போன்றவற்றை மீண்டும் பெறுதல் - மேற்கூறிய 4 மறுசீரமைப்புகளின் விளைவாக ஏற்படுவது.

குழந்தை வளர்ப்பு பணியாளர்களைப் பயிற்றுவித்தல்

மனித வளர்ச்சி சார்ந்த எந்த திட்டம் ஆனாலும், குழந்தைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளே வருங்கால முதியவர்கள் ஆவார்கள்.

குழந்தை வளர்ப்பு

அனைத்து மனித சமுதாயத்திலும், குழந்தை பராமரிப்பு என்பது ஒரு குடும்பத்தின் அடிப்படையான கடமை ஆகும். அதிலும் குறிப்பாக தாயின் கடமை ஆகும். பழங்காலத்தில் குழந்தையின் பொதுவான ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த சேவைகள் குழந்தையின் குடும்பத்தினர்களால் அளிக்கப்பட்டது. இன்று, சமுதாயத்தில் சமூக நிறுவனங்கள் உருவாக ஆரம்பித்த பின், குழந்தைகள், இணை நிறுவனங்கள் மூலமாக பராமரிக்கப்படுகின்றனர். அதாவது பள்ளிகள், மருத்துவ மையங்கள், பால்வாடி மற்றும் பல சமூக சிக்கல்கள் மற்றும் பொருள் ஈட்டுவதில் மற்றும் முன்னேற்றம் அடைவதில் உள்ள போட்டியால், குடும்ப நபர்கள் தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்து பராமரிப்பது என்பது இயலாத காரியம் என்று உறுதியாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக இணை நிறுவனங்கள் அதிகமான பொறுப்புகளை, குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு திட்டங்களில் செயல்படுத்த வேண்டியுள்ளது. இத்திட்டம் சார்ந்தவைகளில், அரசு அதிகமான பொறுப்புடன் குழந்தை பராமரிப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

குழந்தை வளர்ப்பு பணியாளர்கள்

குழந்தை பராமரிப்பு சேவைகளை நன்முறையில் செயல் படுத்துவதற்கு பல வேறுபட்ட குழந்தை பராமரிப்பு பணியாளர்களின் அவசியம் உள்ளது. அவர்கள் குழந்தையின் அடிமட்ட நிலையில் இருந்து, குடும்ப நபர்கள் சாதாரணமாக குழந்தைக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பராமரிப்பு சேவைகள் செய்யப்படுகின்றன.

இச்சேவையை பொருத்த மட்டிலும், குழந்தை பராமரிப்பு பணியாளர் குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து பணியாற்றி, தாயின் திறன்கள் மற்றும் ஆற்றலை மேம்படுத்தி, குழந்தையை சிறப்பாக கவனித்து கொள்ள உதவுவார்கள். குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மனித சமுதாயத்தில் உள்ள கடுமையான சிக்கல்கள் மற்றும் சிறப்பு அறிவுத்திறனை பல்வேறு சமூக செயல்பாடுகள் மூலம் பெற்றால், ஒரு குழந்தையின் தேவைகளை அறிந்து கொள்ள பயன்படும். இவ்வாறாக, ஒரு குழந்தையின் தேவைகள், பொருத்தமான பயிற்சி பெற்ற குழந்தை பராமரிப்பு பணியாளர் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.

குழந்தை வளர்ப்பு பணியாளர்களின் வகைகள்

நிறுவனங்கள் சாரா சமூக சேவைகள்

நிறுவனங்கள் சாராத சமூக சேவைகளுக்கான, குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் என்பவர்கள் முன் பள்ளி குழந்தைகளுடன் சம்பந்தமுடைய குழந்தைகள் காப்பகம் உதவியாளர்கள், மழலையர் பள்ளி/ பால்வாடி ஆசிரியர்கள், பால சேவிகாக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முதலானவர்கள். இங்குள்ள பணியாளர்கள், பொழுது போக்குகள், மனமகிழ்வுக்கான நிகழ்ச்சிகள், நூலகம் மற்றும் கலைகள் தொடர்புடைய செயல்பாடுகளை குழந்தைகளுக்கு அமைத்து தருவர். இன்னும் சில பணியாளர்கள் குடும்பங்களோடு சேர்ந்து தத்தெடுப்பதற்கு மற்றும் அன்பு செலுத்துவதற்கும், சீராக வளர்ப்பதற்கும் பணியாற்றுவர்.

குழந்தை நலமும், பள்ளிக் குழந்தைகளின் நலன் காக்கும் சேவையில், ஆரோக்கிய நலப்பணியாளர்களான மருத்துவச்சி, துணை செவிலியர்கள், குழந்தை நல மருத்துவர் மற்றும் சிலர் மட்டுமே ஈடுபடுவார்கள். உள் இயல்பு சார்ந்த வல்லுநர்கள் மனநல மருத்துவர் மற்றும் மன நலம் காக்கும் சமூக சேவகர்கள் போன்றோர். சமூக சேவைப் பணிகளில், குழந்தைகளுக்கு வழிகாட்டும் கிளினிக் போன்றவைகளில் பணி செய்கின்றனர்.

இதனுடன், அனைத்து சேவைகளை செய்யும் பணியாளர்களான கிராம சேவகர்கள் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, ஊட்டச்சத்து சேவைகள், தாயின் நலம் பேணுதல் போன்றவற்றை கவனிப்பார்கள். இத்தொழிலாளர்களுக்கு உதவியாக ஒருங்கிணைப்பதற்குள் கிராம் காக்கி / கிராம லக்மி போன்ற மகளிர் தொழிலாளர்கள் செயல்படுவர்.

இல்லச் சேவைகள்

விடுதி இல்ல நிறுவனங்களில், இல்லத்தாய்கள், உறைவிட பணியாளர்கள், குழு தொழிலாளர்கள், சமூகத்தால் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்தின் கண்காணிப்பாளர் முதலானவர்கள் உள்ளனர்

சமூக வளர்ச்சி சேவகர்கள்

குழந்தைகளுக்கான திட்டங்கள், பால்வாடிகள், குழந்தைக் காப்பகங்கள், விளையாட்டு மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், மகப்பேறு மற்றும் குழந்தை நல மையங்கள் முதலானவைகள் மூலமாக நிறைவேற்றப்படுகின்றன. ஆகையால், கிராம சேவகர் என்கிற பணியாளரை அறிமுகப்படுத்தி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன,

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.11111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top