பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோல்வெள்ளை நோய்

தோல்வெள்ளை நோய் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தோல் நிறத்துக்குக் காரணமான உயிரணுக்களான மெலனோசைட்டுகள் இறக்கும் போது  அல்லது செயல்பட முடியாத போது இது ஏற்படுகிறது. தோல்வெள்ளை நோயின் காரணம் அறியப்படவில்லை. ஆனால், தன்தடுப்பாற்றல், மரபியல், உயிர்வளியேற்ற அழுத்தம், நரம்பியல் அல்லது வைரல் காரணங்களால் இது ஏற்படலாம்

காரணங்கள்

மெலனின் என்னும் தோல் நிறமி இழப்பால் தோல்வெள்ளை உண்டாகிறது. மேலும் கீழ்வரும் காரணிகளோடு அது தொடர்புடையதாக இருக்கலாம்:

தன்தடுப்பு நிலைகள்

சாதாரணமாகக் காணப்படும் கூறற்ற தோல்வெள்ளை ஒரு தன்தடுப்பு நோய் நிலை எனக் கருதப்படுகிறது. உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் சரிவர பணியாற்றவில்லை என்பது இதற்குப் பொருள். வைரஸ் போன்ற அயல்பொருட்களைத் தாக்கி அழிப்பதற்குப் பதிலாக, நோய்த்தடுப்பு மண்டலம் உருவாக்கும் எதிர்பொருட்கள் (தொற்றை எதிர்த்துப் போராடும் புரதங்கள்) உடலின் ஆரோக்கியமான அணுக்களையும் திசுக்களையும் தாக்குகின்றன.

நரம்பு வேதிப்பொருட்கள்

அபூர்வ வகையான, கூறுடைய தோல்வெள்ளை, தோலில் உள்ள நரம்புகளின் இறுதியில் இருந்து வெளிவிடப்படும் வேதிப்பொருட்களால் உண்டாகிறது எனக் கருதப்படுகிறது. தோலின் மெலனோசைட் உயிரணுக்களுக்கு இவ்வேதிப்பொருட்கள் நச்சாகும்.

நோய்கண்டறிதல்

கூடுதல் சோதனைகள்:

உட் விளக்கு

உட் விளக்கு எனப்படும் புற ஊதாக்கதிர் விளக்கைப் பயன்படுத்தி (இருக்குமானால்) மருத்துவர் தோலை நன்றாகப் பரிசோதிப்பார். இதற்கு இருட்டு அறை தேவைப்படும். விளக்கு, தோலில் இருந்து 10-13 செ.மீ (4-5 அங்குலம்) தூரத்தில் இருக்க வேண்டும். புற ஊதாக் கதிரின் கீழ் தோல்வெள்ளைத் திட்டுக்களை எளிதாகப் பார்க்க முடியும்.

பிற தன்தடுப்பு நிலைகள்

சாதாரணமாகக் காணப்படும் கூறற்ற தோல்வெள்ளை நோய் பிற தன்தடுப்பு நிலைகளோடு தொடர்பு கொண்டதாகும்.

நோய்மேலாண்மை

இந்நோய்க்கு எந்தவிதமான குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை. எனினும், தோலின் தோற்றத்தைச் சில மருத்துவ முறைகளின் மூலம் தக்க வைக்க முடியும்.

மருத்துவத்தில் அடங்குவன:

  • தோலின் மேல் பூசும் மருந்துகள் (ஊக்க மருந்துக் களிம்புகள்)
  • மருந்தையும் புறஊதாக்கதிர் ஏ ஒளியையும் பயன்படுத்துதல் (PUVA)

அறுவை மருத்துவத்தில் அடங்குவன:

ஒருவரின் சொந்த திசுக்களையே எடுத்து ஒட்டவைத்தல். உடலின் ஒரு பகுதியில் இருந்து திசுக்களை எடுத்து இன்னொரு இடத்தில் ஒட்டுதல். இது, சிறு தோல்வெள்ளைத் திட்டுக்கள் உடைய நோயாளிகளுக்குச் சில சமயம் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.95161290323
தேவா May 01, 2017 08:46 PM

எனது கீழ் உதட்டின் இரு பக்கங்களிலும் தோல் வெள்ளையாக உள்ளது இவற்றை நீக்க என்ன செய்ய வேண்டும்

ஜனனி Apr 11, 2017 09:39 PM

என் இரு கைகளில் வெள்ளை புள்ளிகள் பல வருடங்களாக உள்ளன இதற்கு காரணம் என்ன எவ்வாறு குணப்படுத்துவது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top