பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை

கர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை செய்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குளூகோ சவால் சோதனை

ஒரு குளுக்கோஸ் சவால் சோதனை, பொதுவாக தங்கள் இரண்டாவது மூன்றுமாத கர்ப்பம் அல்லது 24-28 வாரம் இடையே கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது ஒரு பெண் தன் கர்ப்ப காலத்தில் உருவாகிற கர்ப்பகால நீரிழிவு சரிபார்ப்பதற்காக செய்யப்படுகிற ஒரு எளிய இரத்த சோதனை. ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிக கலோரி உணவுகளை சாப்பிடுவது போன்ற மற்ற பழக்கங்கள் கர்ப்பகால நீரிழிவை ஏற்படுத்தும்.

ஒரு குளுக்கோஸ் சவால் சோதனை எப்படி செய்யப்படுகிறது?

கர்ப்பத்தின் 24 மற்றும் 28 வாரமிடையே, ஒரு பெண்ணுக்கு 75 கிராம் குளுகோஸ் கொடுக்கப்படும். குளுகோசை சாப்பிட சரியான வழி, எல்லா 75 கிராமையும் ஒரு டம்ளரில் கலந்து குடிப்பது தான்.  நீங்கள் ஆய்வகத்தை அடையும் முன் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு இரத்த மாதிரி, இரத்தத்தில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவை சரிபார்க்க எடுக்கப்படுகிறது. குளூகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரித்தல், கர்ப்பகால நீரிழிவு இருப்பதை குறிப்பிடுகின்றன.

யார் சோதனை செய்து கொள்ள வேண்டும்?

அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு சோதனை பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் இந்த சோதனை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டியவர்கள்:

  • வயது 35 மற்றும் அதற்கு மேலே போன்ற தாமதமாக கருவுற்றிருக்கும் பெண்கள்
  • குண்டான பெண்கள்
  • நீரிழிவு குடும்ப வரலாறு கொண்ட பெண்கள்

ஆதாரம் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

3.0406504065
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top