பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பட்டு வளர்ச்சித்துறை

பட்டு வளர்ச்சித்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படுகிறது, அதன் விவரம் பின்வருமாறு

 1. மல்பரி நடவு மானியம்
 2. தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்
 3. நவீன புழுவளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ரூ. 52,500/- மதிப்பில் வழங்கப்படுகிறது
 4. சொட்டுநீர் பாசனம் அமைத்தல்

மல்பரி நடவு மானியம்

ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது (ரூ.52,500/-)

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

 • பூர்த்தி செய்த விண்ணப்பம்
 • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 2
 • மல்பரி தோட்டத்தில் எடுக்கப்பட்ட முழுஉருவ புகைப்படம் தலா 2
 • சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்

பயனாளி:

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

பயன்கள்:

ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/-

தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்

 • நிலை 1 (1500 ச.அடிக்குமேல்) = 82,500/-
 • நிலை 2 (1000 முதல் 1500 ச,அடிக்குள்) = 87,500/-
 • நிலை 3 (800 முதல் 1000 ச,அடிக்குள்) = 63,000/-

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

 • பூர்த்தி செய்த விண்ணப்பம்
 • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3
 • மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2.
 • சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
 • ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள்
 • பொறியாளர் மூலம் வழங்கப்பட்ட புழு வளர்ப்புமனை மதிப்பீடு மற்றும் வரைப்படம் அசல் ஆவணங்கள்

பயனாளி:

புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும்

பயன்கள்:

தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும்

நவீன புழு வளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குதல்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

 • பூர்த்தி செய்த விண்ணப்பம்
 • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம்
 • மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2
 • சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
 • ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள்
 • தாங்கிகள் அமைத்ததற்கான இரசிது, அசல் ஆவணங்கள்

பயனாளி:

புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல் வேண்டும்

பயன்கள்:

நவீன புழுவளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ரூ. 52,500/- மதிப்பில் வழங்கப்படுகிறது

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.50,000/-

பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.12,500/-

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

 • பூர்த்தி செய்த விண்ணப்பம்
 • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3
 • மல்பரி தோட்டத்தில் (லேட்டர்ல், பில்டர்) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2
 • சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
 • ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள்

பயனாளி:

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

பயன்கள்:

சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/-, பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வழங்கப்படுகிறது

தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் / பதவி

தொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

முகவரி

உதவி இயக்குநர்

04343235070, 7598790151

adserikri[at]gmail[dot]com

உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சித்துறை கிருஷ்ணகிரி

ஆதாரம் : https://krishnagiri.nic.in/

Filed under:
2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top